Categories
மாநில செய்திகள்

“10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு”….. கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 6.20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறு தேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களையும் கண்டறிந்து மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |