Categories
மாநில செய்திகள்

“அதுக்கு நாங்க இருக்கோம்… நீ யார்?”…. ஸ்விக்கி ஊழியரை கொடூரமாக அடிக்கும் போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!

கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற போது மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஸ்விக்கி ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து ஊழியர் கூறுகையில், வாகனம் ஒரு பெண்ணை இழுத்து விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை நிறுத்தி நான் தட்டிக் கேட்டேன்.

அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார் என்று கேட்டு என்னை கடுமையாக தாக்கினார். அந்த பள்ளி வாகனம் யாருடையது என்று தெரியுமா எனக் கேட்டு பள்ளி வாகன ஓட்டுனரை அனுப்பி வைத்து விட்டு என்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து என்னை விடுவித்தார் என்று அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து காவலர் அந்த நபரை கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தாக்கிய காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |