Categories
உலக செய்திகள்

விண்வெளி நிலைய கட்டமைப்பு பணி…. விண்ணுக்கு செல்லும் 3 சீன விண்வெளி வீரர்கள்…!!!

சீனா, தங்களுக்கென்று தனியாக விமான நிலையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு மூன்று விண்வெளி வீரர்களை நாளை அனுப்புவதாக தெரிவித்திருக்கிறது.

சீனா விண்வெளியில், டியாங்காங் எனும் பெயரில் தங்களுக்கென்று தனியாக ஒரு விமான நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது இதற்காக இதற்கு முன்பு பல தடவை விண்வெளி வீரர்கள் மூவரை விண்வெளிக்கு சீனா அனுப்பியிருந்தது அவர்கள் ஆறு மாதங்களாக இருந்து பணியை மேற்கொண்டு விட்டு அதன் பின் பூமி வந்தடைந்தனர் இந்நிலையில் சீன விண்வெளி வீரர்கள் மூவரை இம்மாதத்தில் அனுப்புகிறது.

அதன்படி கன்சு என்னும் மாகாணத்தில் இருக்கும் ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுகணை மையத்திலிருந்து சீனாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூவர் லாங் மார்ச்-2எஃப் என்னும் ராக்கெட் மூலம் விண்ணிற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆறு மாத காலம் அங்கு இருந்து விண்வெளி நிலையத்தினுடைய மெங்டியன், வெண்டியன் ஆகிய இரு தொகுதிகளை இணைக்க கூடிய பணியை மேற்கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |