இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 129 குழந்தைகள் உயிரிழந்தன. அதன்பிறகு 2020ஆம் ஆண்டு 28 குழந்தைகள் உயிரிழந்தது. அது நான்கில் ஒரு பங்காக குறைந்தது. குழந்தை இறப்பு விகிதம் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 36 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனாலும் தரவுகளின்படி 36 குழந்தைகளில் ஒரு குழந்தை தனது முதல் பிறந்த நாளைக்கு முன்பே உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை பொருத்தவரை கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் குழந்தை பிறப்பு விகிதத்திற்க்கான வேறுபாடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது.இருந்தாலும் கடந்த சில வருடங்களாக நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.