Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்., எம்.எல்.ஏ-வை தகுதிநீக்கம் செய்ய காங்., எம்.எல்.ஏக்கள் போர்கொடி!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களே கடிதம் அளித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார்.

மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினார். இச்சூழலில் தனவேலுவை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு கொறடா அனந்தராமன், காங் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சட்டப்பேரவையில் உள்ள அவரது அறையில் சந்தித்து மனுவளித்தனர்.

பிப்ரவரி 12ஆம் தேதி புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடவுள்ள நிலையில், அதிரடி நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு கொறடா தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை தகுதி நீக்க கோரி சபாநாயகரிடம் மனு அளித்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |