Categories
உலக செய்திகள்

க்ளோஸ் அப் ஷாட்- வெறித்தனமாக காட்சியளிக்கும் “சூரியன்”

சூரியனை இனோய் என்னும் சூரிய தொலைநோக்கி மூலம் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை என்எஸ்எஃப் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) வெளியிட்டுள்ளது .

பொதுவாக சூரியன் எதுவொன்றும் நெருங்க முடியாத வெப்பத்தைக் கொண்டது. தற்போது இனோய் என்னும் சூரிய தொலைநோக்கி மூலம் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை என்எஸ்எஃப் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) வெளியிட்டுள்ளது . எப்போதும் சாதுவான மஞ்சள் உருண்டை போல காட்சியளிக்கும் சூரியன் தற்போது சர்க்கரை பாகில் கொதிக்கும் சோளத்தை போல இப்புகைப்படத்தில் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து என்எஸ்எஃப் வானியல் அறிவியல் அறக்கட்டளை இயக்குனர் டேவிட் போபோல்ட்ஸ் கூறுகையில்,

இந்த ”இனோய் தொலைநோக்கியில் பணிகளைத் தொடங்கியதிலிருந்து சூரியனின் தகவல்கள் குறித்து நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்” மேலும் 13 அடி கண்ணாடியைக் கொண்ட தொலைநோக்கி மூலம் இச்சாதனை சாத்தியமாகியுள்ளது. இது முதல் மேம்பட்ட தொழில்நுட்ப சூரிய தொலைநோக்கியாகும். இது டிசம்பர் 2013 இல் மறைந்த செனட்டர் டேனியல் இனோய் நினைவாக இப்பெயரிடப்பட்டது.

இந்நிலையில் 1612ஆம் ஆண்டில் முதன்முதலில் கலிலியோ தொலைநோக்கியிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை விட இந்தத் தொலைநோக்கி சூரியனில் வாழ்நாளில் முதல் ஐந்தாண்டு பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்கும். இந்த தொலைநோக்கி மூலம் கொரோனாவிற்குள் உள்ள காந்தப்புலங்களை வரைபடமாக்க முடியும், மேலும் அங்கு சூரிய வெடிப்புகள் ஏற்பட்டால் பூமியின் வாழ்க்கையை பாதிக்கக்கூடும், எனவே இந்த தொலைநோக்கி விண்வெளி, வானிலை பற்றிய புரிதலை மேம்படுத்துவதோடு, சூரிய புயல்களைப் பற்றி முன்னரே தெரிந்துகொள்ள உதவும் என்றார்.

Categories

Tech |