ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் உள்ளிட்ட பிற மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகை காலணிகளுக்கான IS தரசான்றுதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) சமீபத்திய அறிவிப்பின்படி, அனைத்து காலணி உற்பத்தியாளர்களும் BIS சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து காலணிகளும் பொருந்தக்கூடிய இந்திய தரநிலைக்கு இணங்க வேண்டும் மற்றும் தரநிலை குறியை (ISI மார்க்) பணியகத்தின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என கூறியிருந்தது. சட்டவிரோதமானது காலணிகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் சிறைத் தண்டனை மற்றும் மிகப்பெரிய அபராதம் உள்ளிட்ட குற்ற வழக்குகள் விதிக்கப்படும்.