2 மரங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகே சில வருடங்களுக்கு முன்பு அரச மரம் மற்றும் வேப்ப மரத்தை நட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த மரங்கள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து பூக்கும் நிலையில் இருக்கிறது.
இதனை பார்த்த தொழிலாளர்கள் அந்த2 மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதேபோல் நேற்று யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை செய்து இரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.