மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் ஓட்டம் நடத்த முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே லோயர்கேம்ப் வண்ணான்துறை என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டு மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்துவதற்காக சென்ற மாதம் 18ஆம் தேதி அதிகாரிகள் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்கு விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சட்டத்தை கைவிட்டுவிட்டு வைகை அணையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் கூடலூர் விவசாயிகள், தேனி மாவட்ட பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு ,முல்லைச்சாரல் விவசாய சங்கத் தலைவர் கொடியரசன், உத்தமபாளையம் தொண்டு நிறுவன தலைவர் மும்தாஜ் உள்ளிட்டோர் தொடர் ஓட்டம் நடத்த ஏற்பாடு செய்து விவசாயிகள் அங்கு ஒன்று கூறியதையடுத்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதன்பின் விவசாயிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோது நடந்து செல்ல அனுமதி வேண்டும் என விவசாயிகள் கேட்டதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின் போலீஸார் அனுமதி வழங்காததால் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றார்கள்.மேலும் அனுமதி பெற்றபின் குருவனூத்து பாலத்தில் இருந்து வைகை அணை வரை தொடர் ஓட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் கூறினார்கள். இதனால் பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.