Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது கார் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உருளையன்பேட்டை பகுதியில் பிரசாந்த் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்ரம், பிரசாந்த் குமார் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து வல்லம் தொட்டி ஆற்று பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் காயமடைந்த பிரசாந்த்குமார், ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |