Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்…. “அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்”…!!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூரில் இருக்கும் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி  அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது. கம்பனேரி ஊராட்சியில் கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் 2000 மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |