Categories
உலக செய்திகள்

அதிநவீன ஏவுகணைகளை…. உக்ரைனுக்கு வழங்க வேண்டும்…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர்….!!

நீண்ட தூரம் சென்று  அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிட வேண்டுமென  உக்ரேன் அதிபர் கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களை முடிந்துவிட்ட நிலையிலும், இந்த போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் அந்நாட்டின் கிழக்கு  பகுதியிலுள்ள  டான்பாஸ் நகரத்தை   முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய இராணுவ படைகள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றது. இந்நிலையில், ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க, நீண்ட தூரம் சென்று குறிகோளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கி அமெரிக்கா உதவிட வேண்டும் என்று அமெரிக்காவிடம் உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா கேட்டுக்கொண்டார்.

மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கியின் அறிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “எங்கள் தேசத்தை பாதுகாக்க இத்தகைய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. உக்ரைன் ஒருபோதும் ரஷியாவை தாக்கியதில்லை, என்றும் அப்படி செயல்படாது.

ரஷ்ய இராணுவ படைகளால் நடத்தப்படும் குற்றங்கள் எவ்வளவு கேவலமானதாக இருந்தாலும் சரி, ரஷ்யா மீது உக்ரைன் ஒருபோதும் தாக்குதலை நடத்தாது. நாங்கள் ஒவ்வொரு உக்ரேனியரின் உயிரையும் காப்பாற்ற விரும்புகிறோம். மேலும் உக்ரைனின் துருப்புக்களை ரஷ்ய ஆயுதப்படைகளிடமிருந்து விலக்கி வைக்கவே விரும்புகிறோம். உக்ரேனிய இராணுவ வீரர்களின் உயிரைக் காக்க  அமெரிக்கா கிரெனேட் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டிடம் உக்ரைன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |