தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியானா மாநிலம் குர்கிராமில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்திய அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பாசினி பாத்திமா பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய பாத்திமா இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஒட்டு மொத்தமாக 250 பேர் கலந்து கொண்டனர்.
மொத்தம் மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றதாகவும் கூறினார். ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.