Categories
உலக செய்திகள்

விரைவில் பட்ஜெட் தாக்கல்…. அரசு ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. அந்நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 204.15 ஆகவும், உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் கடும் தவிப்பிற்குள்ளாகினர். இதனை அடுத்து எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதால் பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் விரைவில் பட்ஜெட் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு இடம் பெற வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என அரசு உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |