Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க மாவட்டம் இருக்கானு பார்த்துக்கோங்க…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தெற்கு அரபிக்கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோர பகுதிகள்,தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |