Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு எதிரொலி…. அரசுக்கு எதிராக மக்கள் கோஷம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அந்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 204.15 ஆகவும் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று அந்நாட்டு அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

Categories

Tech |