Categories
உலக செய்திகள்

வங்காளதேசம் கொள்கலன் கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

வங்காளதேசத்தின் தென் கிழக்கு நகரமான சிதகுண்டாவிலுள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் குறைந்தது 5 பேர் இறந்தனர். அத்துடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது நாட்டின் முக்கியமான கடல் துறைமுகமான சிட்டகாங்கிற்கு வெளியே 40 கி.மீ (25 மைல்) தொலைவிலுள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு நிலையத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஜலால் அகமது தெரிவித்தார். இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்களும் லேசான காயமடைந்தனர்.

இவ்விபத்தில் 5 பேர் இறந்ததாகவும், குறைந்தது 100 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் காயமடைந்தவர்களில் 20 பேர் 60 முதல் 90 % வரையிலான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். 30 ஏக்கர் நிலப்பரப்பை உடைய தனியார் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதற்கிடையில் தனியார் கிடங்கிலுள்ள சில கொள்கலன்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |