Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி…. பாகிஸ்தானில் அரசு பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு….!!!

பாகிஸ்தானில் அரசாங்க பணியாளர்கள் தங்களின் ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பணவீக்கமும்  அதிகரித்திருப்பதால், எரிபொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மின்சார கட்டணமும், பெட்ரோல், டீசல் விலையும் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதனால், அரசாங்க பணியாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி நாளையிலிருந்து நிதியமைச்சகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Categories

Tech |