பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். புனேவில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாகனங்கள் பற்றி தான் பேசியபோது பலர் கேள்வி எழுப்பியதாகவும் இப்போது அவற்றிஇ ன் தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். மேலும் எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் போக்குவரத்து துறையில் முக்கிய பங்காற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.