சரக்கு ரயில் மேற்கூரையின் மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நபரால் ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், ரயில் மேற்கூரையில் படுத்துத் தூங்கியபடி வந்துள்ளார். இதையடுத்து ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது இதை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சேர்ந்து சரக்கு ரயிலை நிறுத்திவிட்டு அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி மின் இணைப்பை துண்டித்து கீழே இறக்கினர். சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.