Categories
உலக செய்திகள்

இந்தியா-செனகல் நாடுகளுக்கிடையே அதிகரித்த வர்த்தகம்…. வெங்கையா நாயுடு கருத்து…!!!

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கிடையே 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு துவங்கப்பட்டு 60 வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு செனகல் நாட்டிற்கு சென்று இரு நாடுகளுக்கிடையேயான வணிக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாட்டிற்கு இடையேயான நிதி மற்றும் வர்த்தக உறவு அதிக வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவிய சமயத்திலும் சுமார் 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வர்த்தகம் நடந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் இது மேலும் அதிகமாக வளரும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |