Categories
மாநில செய்திகள்

போலீஸ் கமிஷனர் சூப்பர்…! C.M தான் உடனே சரி செய்யணும்…. பாராட்டியஅண்ணாமலை… அரசுக்கு முக்கிய கோரிக்கை …!!

தமிழக அரசின் ஊழல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது என சென்னை கமிஷனர் பேசிய  பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்களும் பார்த்தோம். நாங்கள் எப்போதுமே சென்னை கமிஷனர் தப்பு பண்ணுகிறார் என்று எங்கும் சொல்லவில்லை.

கீழ்  மட்டத்தில் இருக்க கூடிய சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்களை பணி செய்ய விடாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசியல்வாதிகள் செய்கின்றார்கள் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. திமுக எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் கண்ட்ரோல் எடுத்துவிட்டு, பஞ்சாயத்து பண்ணனுவதுதான்  ஸ்டேஷன்ல நடக்குது.

கமிஷனர் நல்லவராக இருக்கலாம் அல்லது நல்லது  செய்யலாம் என்று பிரஸ்மீட்டில் சொல்லலாம்.ஆனால் கீழ் இருக்கக் கூடிய அரசியல் செய்பதை இவரால் தடுக்க முடியாது. அதை முதலமைச்சர் தான் சரி செய்ய வேண்டும். அதனுடைய வெளிப்பாடுதான் இவ்வளவு குற்றங்கள். நாங்கள்  காவல்துறையின் உயர் அதிகாரிகளை தவறு சொல்லவில்லை.

சப்-இன்ஸ்பெக்டரை தூக்கி பந்தாடும் பொறுப்பில் இருக்கும் எம்எல்ஏ,  அமைச்சர் கையில் இருக்கு ஒன்றிய செயலாளர்கள்,  திமுக மாவட்ட செயலாளர்கள் என இருப்பவர்களை எப்படி கமிஷனர் சரி செய்ய முடியும். இதை மாநில அரசு முதலமைச்சர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து என அண்ணாமலை கூறினார்.

Categories

Tech |