தமிழகத்தில் புதிய வகையிலான கொரோனா பரவ தொடங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு சற்று அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிய வகையிலான கொரோனா பரவ தொடங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 15 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட BA 4 வகை கொரோனா 4 பேருக்கு உறுதியாகியுள்ளதாகவும்,புதிதாக BA 5 வகை கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.