கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே இருக்கும் கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக 7 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கிய நிலையில், 7 பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.. அந்த சமயம் அப்பகுதியில் சென்ற மக்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது, இவர்கள் அனைவரும் மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், அனைவரும் உயிரிழந்தனர். இதில் 5 பேர் பெண்கள், 2 சிறுமிகள் அடங்குவர்..
அதாவது, சங்கீதா (16), மோனிஷா (16), திவ்யதர்ஷினி (10), பிரியதர்ஷினி (15) ஆகிய சிறுமிகளும்,
நவநிதா (18), சுமந்தா(18), பிரியா(18) ஆகிய 3 இளம் பெண்களும் பரிதாபமாக இறந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.