Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படி செய்யணும்னு தெரியும்…!அந்த தைரியம் எனக்கு இருக்கு…! நிச்சயம் செய்வேன் என சசிகலா உறுதி …!!

திண்டிவனத்தில் பேசிய சசிகலா, இந்த இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதல் தொண்டர்களை கூட நீக்குகிறார்கள் என்று கவலைப் படாதீர்கள். இதுபோன்ற வெற்று அறிவிப்புக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இங்குள்ள சிலர் கழகக் கொடியை பயன்படுத்த கூடாது என்று இடையூறு ஏற்படுத்துவதாக சொன்னார்கள்.

ஆலமரமாக இருந்த இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கின்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு தமது எஞ்சியுள்ள வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவர் எந்தவித ஜாதி மத பேதமின்றி அனைவரின் பேராதரவுடன் இந்த இயக்கத்தை உருவாக்கியதாகவும்,  புரட்சித்தலைவி அம்மாவும் அதே வழியை பின்பற்றியதாகவும்,  தற்போது தானும் அதே வழியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதாகும்சசிகலா  குறிப்பிட்டார்.

நிச்சயமாக கட்சியை விரைவில் ஓன்று சேர்ப்பேன். அந்த தைரியமும் இருக்கு, எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும், நிச்சயமான செய்வேன் என சசிகலா தெரிவித்தார்.

Categories

Tech |