தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தற்போது அந்த பொறுப்புக்கு காவல்துறை பயிற்சி பள்ளி ஏடிஜிபி அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் போல கோவை மற்றும் நெல்லை மாநகர காவல் ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுரை, ராமநாதபுரம்,திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்ட எஸ்பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம், மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன், திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார்,திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார், ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.