திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இராமயன்பட்டி அருகில் சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி உடனே காரைவிட்டு இறங்கி ஆம்புலன்சை வரவழைத்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுரேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் அமைச்சர் அவர் அட்மிட் செய்யப்பட்ட அரசு மருத்துவமனையின் முதல்வரை தன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரை செய்தார். அதன்பிறகே அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். இதன் காரணமாக அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.