Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

18 நாட்கள் கழித்து…. அண்ணனின் உடலை தோண்டி எடுத்த தம்பி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராத்தூர் பகுதியில் ஜெஸ்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஜெஸ்டலுக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெஸ்டல் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெஸ்டலின்‌ உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவருடைய தாய், தந்தையரை அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது நடந்து 18 நாட்கள் ஆன நிலையில் ஜெஸ்டலின் சகோதரர் கிறிஸ்டோபர் அவர் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உடலை தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் புதைத்துள்ளார். இதற்கு அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத கிறிஸ்டோபர் ஜெஸ்டலின் உடலை தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்து விட்டார். இதைப் பார்த்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |