ஒவ்வொரு மாதமும் புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி இந்த மாதம் ஜூன் 1ஆம் தேதி முதல் சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிலிண்டர் விலை முதல் வங்கி கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதனை அனைவரும் தெரிந்திருப்பது அவசியம்.
சிலிண்டர் விலை:
வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சிலிண்டர் ரூ.2,373- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டுக் கடன்:
இந்தியாவின் முன்னணி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான எச்டிஎஃப்சி வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தி உள்ளது.அது மட்டுமல்லாமல் பெரும்பாலான வங்கிகளும் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை ஜூன் 1-ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளன.
வங்கி சேவை கட்டணம்:
இந்தியாவின் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி கடந்த 1ம் தேதி முதல் நடப்பு கணக்குகளுக்கான சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிப்பதற்கான அபராதமும் ஜூன் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் கடன் EMI:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் EMI கட்டணம் உயர்ந்து உள்ளது. ஏனென்றால் வீட்டுக் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது.
இன்சூரன்ஸ்:
நாடு முழுவதும் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சுரன்ஸ் பிரீமியம் தொகை ஜூன் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
பிக்சட் டெபாசிட் வட்டி:
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 50 லட்சம் ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 2.75 சதவீதமாகவும்,100 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 2.90 சதவீதமாகவும் வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.