சென்னையில் அண்ணா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டோ இன்னோவா சொகுசு கார் ஒன்று பாடி அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அச்சமயம் உள்ளே இருந்த ஸ்மார்ட் லாக் ஊட்டி கொண்டதால் காரின் உள்ளே ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காரில் இருந்து மீட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். புகை வந்ததும் தானாக திறந்து கொண்ட காலிலிருந்து மயங்கிய நிலையில் மக்கள் ஓட்டுனரை மீட்டனர்.
அதற்குள் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து 60 சதவீத தீக்காயங்களுடன் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிதாக வாங்கப்பட்ட இந்த காரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் கார் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.