Categories
தேசிய செய்திகள்

என்ன? திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடா….? தேவஸ்தானத்தின் உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி….!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இதனையடுத்து திருப்பதியில் நேற்று முன்தினம் 71,196 பேர்‌ சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு திருப்பதியில் வழக்கமாக பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும். அதற்கு மேல் லட்டு வாங்கிக் கொள்ள விரும்புவர்கள் ரூபாய் 50 செலுத்தி தேவையான லட்டு வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் லட்டுகளை வழங்குவதற்கு தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது பக்தர்கள் ரூபாய் 50 செலுத்தினாலும் 2 லட்டுகளுக்கு மேல் பெற முடியாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் தங்களுக்கு தேவையான லட்டுகளை வாங்கி செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கு ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப் பட்டாலும் பக்தர்களுக்கு அது போதுமானதாக இல்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு இடைத்தரகர்கள் அதிகமான விலையில் லட்டுகளை விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

Categories

Tech |