Categories
மாநில செய்திகள்

“இனி இந்திய ரூபாய் நோட்டுகளில்”…. இவர்களின் படங்கள் அச்சிடப்படுமா…? வெளியான புது தகவல்…!!!!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்றோரின் படங்கள் பயன்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி அவர்களின் படம்  இடம்பெற்றிருக்கின்றது.

இந்த நிலையில் அரசு வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மின்டிங்  கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்றவை ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஐஐடி டெல்லி பேராசிரியரான திலீப் ஷஹானி இந்திய ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க்ஸைத் தேர்ந்தெடுத்து இறுதி ஒப்புதலுக்காக அரசாங்கத்திடம் சமர்பிப்பவர் ஆவர். இதனால் மகாத்மா காந்தியின் படத்தோடு சேர்த்து ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் போன்றோரின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுமா  என கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |