Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நான் வேலை வாங்கி தாரேன்…. 50 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

பணமோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொங்கனூர் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரை சந்தித்து பேசிய செந்தில்குமார் என்பவர் ஜெகநாதனின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக 50 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெகநாதன் செந்தில்குமாரிடம்  50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை செந்தில் குமார்  எந்த வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை.

இதனால் ஜெகநாதன் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு  கேட்டுள்ளார். ஆனால் செந்தில்குமார் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெகநாதன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |