திருமணத்திற்காக ஜவுளி எடுத்துவிட்டு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் புளியமரத்தில் மோதி 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் 69 வயது ஜெயலட்சுமி. இவருடைய மகன் கார்த்திகேயனுக்கு வருகின்ற 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கின்றது. இதனால் திருமணத்திற்காக ஜவுளி எடுப்பதற்கு காஞ்சிபுரத்திற்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றார்கள். அப்போது ஜவுளி எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கோவை செல்லும் போது சக்தி எஸ். ஆர். டி கார்னரில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் இடுபாட்டில் சிக்கிய வேனில் சென்ற ரவிக்குமார், சாந்தி, சுரேஷ், ஜெயலட்சுமி, ரம்யா பிரியா, மேகலா, சண்முகம், காஞ்சனா, வேன் ஓட்டுனர் ராஜ்மோகன் உட்பட 9 பேர் காயத் படுகாயமடைந்துள்ளனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.