பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியிலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவுக்கு கிளம்பியது. அந்த லாரியை கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்த 31 வயதுடைய அபுஜித்ராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திண்டுக்கல் டு கரூர் நான்கு வழி சாலையில் வேடசந்தூர் அருகில் தம்மனம்பட்டி பிரிவில் தனது லாரியை ரோட்டின் ஓரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது திண்டுக்கல் இருந்து கரூர் நோக்கி சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி அபுஜித்ராஜ் ஓட்டி வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி வந்த மதுரையில் வசித்த ஓட்டுநர் 22 வயது வெற்றிவேல் மற்றும் உடன் வந்த மாற்று ஓட்டுநர் 43 வயதுடைய சிவச்சந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளார்கள். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அபுஜித்ராஜ் காயமின்றி உயிர் பிழைத்தார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.