Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்க முடிவு”…. பயணிகள் சங்கம் எதிர்ப்பு…!!!!

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக செல்ல பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்வதால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகி வந்தது.

இதனால் நேரம் வீணாவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்த நிலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வராமல் பைபாஸ் வழியாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால் 40 நிமிடங்கள் வரை நேரம் மிச்சமாகும்.

அனந்தபுரி ரயிலானது 40 நிமிடங்கள் முன்னதாக சென்றாலும் வழக்கமான நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாக கொல்லத்தில் இருந்து புறப்படுகின்றது. ரயில்வே வாரியம் இதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் கால அட்டவணை வெளியாகும். இந்நிலையில் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள்.

இதுகுறித்து தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளதாவது, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை  டவுன் வழியாக இயக்கினால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் நிலையத்திற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் அதிக பணம் கொடுத்து செல்ல வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சுற்றுலா பயணிகள் நாகர்கோவில் டவுனுக்கு செல்ல வேண்டும். இதனால் அதிக செலவு, வீண் அலைச்சல் ஏற்படும். ஆகையால் இம்முடிவை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |