Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட கல்லூரி மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரம் காந்தி தெருவில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷேக் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தரமணியில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் ரகுமான் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தரமணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மாணவன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என ரகுமான் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |