Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கிய தம்பதியினர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(33) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோமதியின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று விஜயகுமாரின் மனைவியான கனகவள்ளி என்பவர் கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து கோமதி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த விஜயகுமாரும் அவரது மனைவியும் இணைந்து கோமதியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து கோமதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் காயமடைந்த கோமதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமார் மற்றும் கனகவள்ளி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |