Categories
உலக செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயத்தில்…. கொடூரத் தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஒண்டோ மாநிலத்தில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியா நாட்டில் ஒண்டோ என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் வடமேற்குப்  பகுதியில்  செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பெந்தகோஸ்தே  ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை விசியும் தாக்குதல்  நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்  காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபோன்று நைஜீரியாவில் பல இடங்களில் பயங்கரவாத பிரச்சினைகள் அரங்கேறியுள்ளது உள்ளது. ஆனால் அந்நாட்டின் அமைதியான மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் ஒண்டோவில் நடந்த இந்த கொடூர தாக்குதல், பலத்த அதிர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |