Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தேவை பூர்த்தியாகும்…! காதல் கைகூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் நாளாக இருக்கிறது.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக கடுமையாக உழைப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். அவர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிட்டும். வருமானத்தையும் இன்று நீங்கள் சீராக்கிக் கொள்வீர்கள். வருமானத்தையும் நீங்கள் இருமடங்காக ஆக்கிக் கொள்வீர்கள். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய விஷயங்கள் இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் சீராகிவிடும்.

கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். நீங்கள் கொடுத்த கடன் பணம் இன்று உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்ப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரங்கள் நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். போட்டிகளும் எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இழுபறிகள் மாறிவிடும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கூடிய சூழல் உள்ளது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதல் திருமணத்தில் முடியும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். மேற் கல்விக்காக தயாராகும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உள்ளது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |