மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் தேவைகள் கண்டிப்பாக பூர்த்தி அடையும்.
இன்று நீங்கள் கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும். இன்று உங்களுக்கு திருமணத்தில் இருந்த தடையும் தாமதமும் விலகிச்செல்லும் நாளாக உள்ளது. திருமணத்திற்காக உங்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கிடைக்கக்கூடும். சுபகாரிய பேச்சுக்கள் இனிதே நிறைவேறும். இன்று உங்கள் நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இன்று உங்களுக்கு காலையிலேயே கலகலப்பான செய்திகள் கிடைக்கும்.
இன்று நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கையில் வந்து சேரும். விருந்து மற்றும் கேலி கிண்டல் செய்யும் நாளாக இன்றைய நாள் குழந்தைக்கு. திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆதலால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூட்டு வலி மற்றும் முதுகு வலி தொந்தரவு வரக்கூடும்.
இன்று உங்களுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்புக்கள் கிட்டும். நீண்ட நாள் காணாமல் போன பொருட்கள் கூட இன்று உங்கள் கையில் வந்து சேரும். சமூகத்தில் அந்தஸ்தும் உயர்வான சூழ்நிலையும் ஏற்படுத்துவதாக உள்ளது இன்றைய நாள்.
விஐபி-யின் சந்திப்பு இன்று உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் நீங்கள் ஜாக்கிரதையாக பேசுங்கள். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவசரமாக எந்த ஒரு முடிவையும் செய்யக்கூடாது. இருவருக்கும் இடையே விட்டுக் கொடுத்து செல்வது கண்டிப்பாக அவசியமாகும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். தேவையில்லாத கடன்கள் நீங்கள் புதிதாக ஏதும் வாங்க வேண்டாம். நீங்கள் யாருக்கும் எவ்வித மான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம்.
மாணவ மாணவியர்கள் இன்று படிப்புக்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். விளையாடும்போது விளையாட்டில் கவனம் தேவை. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது கரும் நீலம் நிறத்திலான ஆடைகள் அணிவது சிறந்தது. கரும் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.