Categories
தேசிய செய்திகள்

மக்களே குட் நியூஸ்….POST OFFICE -இல் சூப்பர் சேமிப்பு திட்டம்…. 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால், மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழலில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. இதையடுத்து தற்போது பெரும்பாலான மக்கள்,  சேமிப்பு திட்டங்களில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். எனவே எந்த வித ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாகும்.

அதிலும் செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம், தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டம் உள்ளிட்டவை, மக்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கிராம சுரக்‌ஷா என்ற திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கிறது. மேலும் இத்திட்டத்தில் 19 வயது நிறைந்தவடைந்த குடிமக்கள் சேர்ந்து முதலீடு செய்யலாம் எனவும், ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும். எனவே 58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால், ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும். எனவே இத்திட்டத்தில் இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் முதலீட்டாளர்கள் செலுத்தலாம். மேலும் 60 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால், ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 செலுத்த வேண்டும்.

இதையடுத்து அவ்வாறு செலுத்தினால், 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சம், 58 வயதில் ரூ.33.40 லட்சம் மற்றும் 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சம் தொகையும் பெறுவார்கள். ஆகவே இந்த திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. ஆனால்  4- ஆண்டுகள் முதலீடு செய்த பின்னரே, கடன் கிடைக்கும். மேலும் அவசர காலங்களில், 30-நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது. இதையடுத்து முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பின்,  சரண்டர் செய்யலாம் எனவும் மேலும் 5- ஆண்டுகளுக்கு முன்பு, சேமிப்பு கணக்கை மூடினால் போனஸ் எதுவும் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |