Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வளருதுனு யாரு பார்த்தா ? – கிண்டலடித்து விமர்சித்த சசிகலா ….!!

திமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு, நிரூபிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, அது என்ன சொல்றாங்க வெளியில அப்படின்னா…. அவுங்க  ஏதோ பேசிட்டு இருக்காங்க, அப்படின்னு தான் எங்களுக்கு தகவல் வருது..அவங்ககிட்ட ஏதோ பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்காங்க.  அதனால தான் அவங்க சொன்ன ஸ்பீடுக்கு வேலை நடக்கல. அது தான் சொல்றாங்க.

எல்லாரும் சொல்றாங்க.  என் காதுக்கும் அந்த செய்தி வருது,  அதை நான் உங்ககிட்ட சொல்றேன். தொண்டர்கள் கொடியை நிரந்தரமாக தாங்கி பிடிக்க, நிச்சயமாக…  விரைவில் கட்சியை ஓன்று சேர்ப்பேன். அந்த தைரியமும் இருக்கு, எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும், நிச்சயமாக செய்வேன்.

தமிழகத்தில் பிஜேபி வலுவாக காலூன்றி, அடுத்தலெவலுக்கு வளர்ச்சி நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என்ற கேள்விக்கு, எங்க பாத்தீங்க நீங்க ? பலர் சொல்லுறத  நானும்  கேள்விப்பட்டு இருக்கேன். நான் போய்க்கொண்டு இருக்கின்றேன். எங்களைப் பொறுத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி,  அம்மாவுடைய ஆட்சியை நாங்கள் கொண்டுவருவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |