Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு…? பறந்தது அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும்  ஊரடங்கு கட்டுப்பாடு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகரிப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |