கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகை கத்ரீனா கைப்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மேலும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மலைகா அரோரா, கரீனா கபூர் கான் உள்ளிட்ட 50 முதல் 55 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.