இங்கிலாந்து நாட்டில் ராணி 2-ஆம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டம் கடந்த 2-ந்தேதி வெகு விமர்சையாக நடந்தது. மேலும் இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள் பக்கிங்காம் அரண்மனையில் இருந்தபடி, இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை கண்டு களித்தது.
மேலும் இதன் ஒரு பகுதியாக 9- விமானங்கள் வரிசையாக அணிவகுத்து வானில் பறந்தபடி, அதன் பின்னால் சிவப்பு, வெண்மை மற்றும் நீல நிற புகை வெளியேறியது. இந்த காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, இந்த புகைப்படம் வெளியான பிறகு, இணையத்தில் மற்றொரு சர்ச்சை வெடித்தது.
அதாவது திட்டமிடாத வகையில், 10-வது விமானம் ஒன்றும் பறந்து சென்றுள்ளது என பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அது பறக்கும் தட்டு எனவும், விமானங்களுக்கு பின்னால் அது வானில் சென்றது. இவ்வாறு சிலர் கூறியுள்ளனர். அதனை பறக்கும் தட்டு ஆர்வலர்களான சிலர் குறிப்பிட்டு காட்டி, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். மேலும் இதனை மறுத்த பலர், அது ஆளில்லா விமானங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும் அல்லது விமானம் பறந்த வேகத்தில் பறவை ஒன்று எழுந்து பறந்திருக்கலாம். இவ்வாறும் சிலர் கூறுகின்றனர்.