நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவைப் பொறுத்தவரை என்ன சொல்கிறார்கள். இப்போ ஒரு புது கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்ததும்… அதாவது திராவிட மாடல் அப்படின்னு சொல்றாங்க. இந்த திராவிட மாடல் அப்படிங்கறது என்ன என்பது எனக்கும் புரியல, அவங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை. இந்த திராவிட மாடல் அப்படின்னு இவர்கள் சொல்வதை அந்த காலத்திலேயே புரட்சித் தலைவர் செஞ்சி இருக்காரு.
அம்மா செஞ்சி இருக்காங்க. இந்த திராவிடம் எதுக்காக வந்துச்சு ? ஏழை எளியவர்கள், அவங்கள சமநிலைக்கு கொண்டு வரணும்.அவங்களுக்கு தனக்கு இது கிடைக்கலையே அப்படி நினைக்க கூடாது. அந்த அளவுக்கு அவர்களை உயர்த்தனும் அப்படிங்கிறதனால்தான் அந்த மாதிரி திட்டங்களை எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. இவங்க என்ன புதுசா செய்யப் போறாங்கன்னு, எனக்கு தெரியல.
அம்மா எப்படி செஞ்சாங்க ? ஒரு கிரைண்டர் என எடுத்துக்கோங்க… ஒரு மிக்சி என எடுத்துக்கோங்க…. சாதாரண ஏழை ஜனங்களால் அதை வாங்க முடியாது.அவங்களுக்கு நாம கொடுக்கனும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் அம்மா அதை செஞ்சாங்க. அங்கதான் சமூகநீதியை நான் சொல்றேன். அதே போல ஏழை பிள்ளைகளுக்கு மடிக்கணினி வாங்க முடியாது. அதை அம்மா செஞ்சாங்க, அது சமூக நீதி.சமூக நீதியில் எல்லாத்தையும் நாம செஞ்சுட்டோம். இவுங்க என்னத்துக்கு இதை சொல்லிட்டு இருக்காங்கனு எனக்கு தெரியல என தெரிவித்தார்.