Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. உடனே இத பண்ணுங்க…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அவ்வாறு பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க முடியாத சிலர் நூலகம் மூலமாக புத்தகங்கள் பெற்று தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதேசமயம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திரும பயிலகம் என்ற இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இதில் விருப்பமுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவருகின்ற திருமா பயிலகம் மூலமாக அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் கட்டணமின்றி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பலரும் பயனடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு திருமா பயணத்தின் சார்பாக திறன் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும் தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 9884421041, 8610392275 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |