இத்தாலியின் துரின் பகுதியில் கடந்த 1851 ஆம் வருடம் ஜூன் 6 ஆம் தேதி பிறந்தவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவர் தொழில் முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் காபி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் காபியை பெறுவதற்கு மக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை உணர்ந்த மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை உடைய எஸ்பிரெசோ இயந்திரத்தை 1884-ல் கண்டுபிடித்தார்.
இதன் காரணமாக மக்கள் காபி வாங்குவதற்கு நீண்டவரிசையில் காத்திருக்கும் நேரமானது மிச்சமானது. அதன்பின் சென்ற 1885 ஆம் வருடம் அக்டோபர் 23-ல் பிரான்ஸின் பாரிஸில் எஸ்பிரெசோ இயந்திரதுக்கு ஏஞ்சலோ மோரியோண்டோ சர்வதேச காப்புரிமை பெற்றார். அதனை தொடர்ந்து இந்த இயந்திரம் உலகளவில் புகழ் பெற்றது. பின் ஏஞ்சலோ எஸ்பிரெசோ இயந்திரதின் “காட்ஃபாதர்” என அழைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஏஞ்சலோ மோரியோண்டோவின் 171வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் அடிப்படையில் கூகுள் அவருக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.