பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அதன் ராணுவபட்ஜெட் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கிறது. இது முந்தைய வருடத்தை காட்டிலும் ரூபாய் 8,300 கோடி அதிகமாகும். அதன்படி சென்ற வருடத்தை விடவும் நடப்பு வருடம் ராணுவபட்ஜெட் ஒதுக்கீடானது 6% அதிகமாகும்.
அவ்வாறு அதிகரிக்கப்படுகிற ராணுவம் பட்ஜெட்டில் பெருந்தொகை, ராணுவ வீரர்களின் செலவினங்கள், சம்பளம், படிகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் ஒரு ராணுவ வீரருக்கு வருடத்திற்கு ரூபாய் 26.5 லட்சம் செலவிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.